Theme Check

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தற்போதைக்கு பொருத்தமானது அல்ல: மத்திய அரசு விளக்கம் !!

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தற்போதைக்கு பொருத்தமானது அல்ல: மத்திய அரசு விளக்கம் !!

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தற்போதைக்கு பொருத்தமானது அல்ல: மத்திய அரசு விளக்கம் !!
X

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் வேகமாக நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்த இரண்டு டோஸ்கள் கொண்ட தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vaccine

இதனால் பூஸ்டர் டோஸ் என கூறப்படும் முன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்த நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Vaccine

இந்த நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தற்போதைக்கு 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில்தான் இந்திய அரசின் முழுக்கவனம் இருக்கிறது. பூஸ்டர் டோஸ் என்பது தற்போதைய நிலையில் பொருத்தமானது அல்ல என ஐ.சி.எம்.ஆர். பொது இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியாவில் 69 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 25 சதவீதத்தினர் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it