Theme Check

குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்ற காதலன்… பெண் தற்கொலை!!

குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்ற காதலன்… பெண் தற்கொலை!!

குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்ற காதலன்… பெண் தற்கொலை!!
X

குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி காதலன் துன்புறுத்தியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லியை சேர்ந்த கற்பகம் (27) என்ற பெண்ணுக்கு திருமணமாகி 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கடந்த சில வருடங்களாக பெற்றோருடன் வசித்து வந்தார். அவருக்கு ஆகாஷ் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி கற்பகம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கற்பகத்தின் செல்போனில் இருந்த சில தகவல்கள் அவரது தந்தைக்கு தெரியவந்ததையடுத்து கற்பகத்தின் தற்கொலைக்கு காரணம் அவரது காதலன் ஆகாஷ் தான் என பூந்தமல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.

karpagam

அந்த புகாரில் தனது மகள் கற்பகம் துணிக்கடையில் வேலை செய்து வந்த நிலையில் அங்கு பணிபுரிந்த அவரது தோழியின் சகோதரனான ஆகாஷ்(என்ற) கவுதமை காதலித்து வந்ததாகவும், சுமார் ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் குழந்தை பெற்றெடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

அந்த குழந்தை தனக்கு பிறந்ததில்லை என்று கூறி ஆகாஷ் துன்புறுத்தி வந்தார். தனது மகளின் மீது சந்தேகம் ஏற்பட்டு சரமாரியாக தாக்கிய நிலையில், மகள் தற்கொலை செய்து கொண்டார். தனது மகளின் தற்கொலைக்கு காரணமான ஆகாசை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.

death

மேலும் ஆகாஷ் ஆயுதங்களை கையில் வைத்து கொண்டு சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு இருப்பதும் கஞ்சா புகைப்பது போன்ற வீடியோ மற்றும் அதுகுறித்த ஆதாரங்களையும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தனது மகளின் செல்போனை கேட்டு ரவுடிகள் சிலருடன் வீட்டிற்கு வந்து ஆகாஷ் தன்னையும் பேத்தியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு செல்வதாகவும் கற்பகத்தின் தந்தை தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it