Theme Check

சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி: மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு!!

சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி: மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு!!

சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி: மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு!!
X

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பூரசுந்தரேஸ்வர பாண்டி. இவர் தனது மனைவி சுந்தரி மற்றும் மகன்கள் நிவீஸ், வித்தீஸ் ஆகியோருடன் கும்பகோணத்தில் தங்கி டீ கடை நடத்தி வந்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சுந்தரியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை விட்டுப் பிரிந்த கற்பூரசுந்தரேஸ்வரபாண்டி தனது இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு சொந்த ஊரான திருநாளூரில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 17-ம் தேதி காலை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென மாயமாகியுள்ளனர். இதுகுறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மறுநாள் 18-ம் தேதி கா மாலையில் வீட்டருகே உள்ள செல்லாக்குளத்தில் 2 சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி காவல்துறையினர் பிரேதங்களை கைப்பற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்க்கூறு ஆய்விற்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் சிறுவர்களின் முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் இருப்பதாகக் கூறி அப்பகுதி கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில் 2 சிறுவர்களும் தாயில்லாத காரணத்தால் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ளக் கூடியவர்கள், சமீபத்தில் பெய்த கனமழையில் கூட குளத்திற்கு சென்றதில்லை. அப்படியிருக்கும் போது பேண்ட் சட்டையோடு சிறுவர்கள் எப்படி குளத்திற்குள் பிணமாக கிடந்தார்கள்? முதல் நாள் காணாமல் போனவர்கள் மறு நாள் குளத்தில் கண்டெடுக்கும் போது உடல்கள், அப்பொழுதுதான் தண்ணீருக்குள் போட்டது போன்று இருந்தது என்று கூறினர்.

எனவே காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சிறுவர்களின் சாவில் உள்ள குற்றப் பின்னணியை களையுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
Share it