Theme Check

சொகுசு கார் ஏறியதில் நடைபாதையில் தூங்கிய சிறுவர்கள் பலி!!

சொகுசு கார் ஏறியதில் நடைபாதையில் தூங்கிய சிறுவர்கள் பலி!!

சொகுசு கார் ஏறியதில் நடைபாதையில் தூங்கிய சிறுவர்கள் பலி!!
X

டெல்லியில் அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ. கார் ஒன்று நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

27 வயது தொழிலதிபர் ஒருவர் தனது உறவினருக்கு வாங்கிய பி.எம்.டபிள்யூ. கார் எவ்வளவு வேகமாக செல்கிறது என்பதை அறிந்துகொள்ளவதற்காக, காரை வேகமாக ஓட்டிச் செல்லும்போது இந்த விபத்து நடந்துள்ளது.

அதிகாலை நேரம் என்பதால் நடைபாதையில் படுத்திருந்தவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த கார் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது.

bmw

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாக சொகுசு கார்கள் பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 2002ஆம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில் நடிகர் சல்மான்கான் ஓட்டிய கார், நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it