Theme Check

பி.பி.எல். கார்டுகளை அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் ஒப்படைக்க காலக்கெடு !!

பி.பி.எல். கார்டுகளை அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் ஒப்படைக்க காலக்கெடு !!

பி.பி.எல். கார்டுகளை அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் ஒப்படைக்க காலக்கெடு !!
X

இந்தியா முழுவதுமே வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் இதே முறை கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் பி.பி.எல். கார்டுகள் என அழைக்கப்படும் இந்தக் கார்டுகளை பலரும் சட்டவிரோதமாக பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

இவ்வாறு சட்டவிரோதமாக பி.பி.எல். ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்களிடம் இருந்து, அவற்றை பறிமுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகார துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிலையில், கர்நாடகத்தில் சட்டவிரோதமாக பி.பி.எல். ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள், அவற்றை மார்ச் 31ம் தேதிக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.

இதன்படி கர்நாடகத்தில் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் மற்றும் 5 ஏக்கருக்கு மேலாக நிலம் வைத்திருப்பவர்களும், ஆண்டு வருமானம் ரூ.1.2 லட்சத்திற்கு மேல் பெறுவோரும் மார்ச் 31-ம் தேதிக்குள் தாமாக முன்வந்து பி.பி.எல் ரேஷன் அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.அமைச்சரின் இந்த திடீர் அறிவிப்பால் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சித்தராமையா விடுத்த அறிக்கையில் "சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது.டி.வி. வைத்திருப்பவர் பணக்காரரா? ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பொருட்களுக்காக பி.பி.எல். கார்டுவை திரும்ப கொடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி விடுத்த செய்தியில் 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் பி.பி.எல். கார்டை திரும்ப ஒப்படைக்கும்படி கூறுவது மக்களுக்கு எதிரான செயலாகும். இந்த முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும், என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் அளித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கர்நாடகத்தில் கடந்த 2012, 2016, 2017-ம் ஆண்டுகளில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களை பொது வழங்கல் முறையில் இணைப்பதற்காக பி.பி.எல். கார்டுகள் வழங்கப்பட்டன. கர்நாடகத்தில் இதற்கு முந்தைய அரசுகள் கொண்டு வந்திருந்த விதிமுறைகளை மீறி பி.பி.எல். கார்டுகளை சட்டவிரோதமாக பலரும் பயன்படுத்தி வருவதாகவும் தற்போது இது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்த அவர் அவற்றை திரும்ப பெறுவதற்காக தான் விதிகளை மீறி வைத்திருபப்வர்கள் மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் தாமாக முன்வந்து, அந்த கார்டுகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறதே தவிர உத்தரவு கிடையாது. மேலும் சட்ட விரோதமாக பி.பி.எல். குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் திரும்ப வழங்காவிட்டால், அவர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கான முழு சுதந்திரத்தை உணவு வழங்கல் துறையின் அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it