#BREAKING 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!!
#BREAKING 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!!

10,11,12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 முதல் மே 28ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெறும். 11ஆம் வகுப்பு தேர்வுகள் மே 9 முதல் மே 31 வரை நடைபெறும் என அமைச்சர் கூறியுள்ளார்.

10,11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25 முதல் மே 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் வெளியாக உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in
Next Story

