Theme Check

#BREAKING:- தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் +2 பொதுத் தேர்வு ரத்து !!

#BREAKING:- தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் +2 பொதுத் தேர்வு ரத்து !!

#BREAKING:- தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் +2 பொதுத் தேர்வு ரத்து !!
X

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தநிலையில், தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யப்படுவதாக கடந்த சனிக்கிழமை தமிழக அரசு அறிவித்தது. கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,மேலும் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அக்குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில்,தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் மாணவர்களின் நலன் கருதி +2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். . தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்காது எனவும் அறிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் மதிப்பெண் வழங்கப்படும் அடிப்படையிலேயே புதுச்சேரியிலும் வழங்கப்படும் என தெரிவித்தார்...

Tags:
Next Story
Share it