#BREAKING: வெற்றி பெற்ற 3 வேட்பாளர்கள் திமுகவில் ஐக்கியம்..!
#BREAKING: வெற்றி பெற்ற 3 வேட்பாளர்கள் திமுகவில் ஐக்கியம்..!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது.
இந்தத் தேர்தலில், பெரும்பாலான இடங்களை ஆளும் திமுக கைப்பற்றியுள்ளது. அந்த வகையில், சிவகங்கை நகராட்சியை திமுக கைப்பற்றியது.
இந்நிலையில், சிவகங்கை 22வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுகவின் சரவணன், 4 மற்றும் 19வது வார்டுகளில் வெற்றி பெற்ற சுயேச்சைகள் நாச்சியார், பாக்கியலட்சுமி ஆகியோர் இன்று (23ம் தேதி) திமுகவில் இணைந்துள்ளனர்.
Next Story

