#BREAKING: தமிழ் திரைக்கு 7 தேசிய விருதுகள்! தனுஷ், விஜய்சேதுபதிக்கு விருது!
#BREAKING: தமிழ் திரைக்கு 7 தேசிய விருதுகள்! தனுஷ், விஜய்சேதுபதிக்கு விருது!

67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். ஆனால், கடந்த வருடம் கொரோனா பரவல் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேசிய விருதுகள் குறித்த அறிவிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதையும் தனுஷ் பகிர்ந்து கொள்கிறார்.

சிறந்த இசையமைப்பாளர் விருது, இசையமைப்பாளர் டி.இமானுக்கு விஸ்வாசம் திரைப்படத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒலிக்காக ரசூல் பூக்குட்டிக்கு ‘ஒத்த செருப்பு எண் 7’ படத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகர் விருது, நடிகர் விஜய்சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருது, நடிகர் தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடன இயக்குநர் விருது, பிரபுதேவாவின் சகோதரர் ராஜு சுந்தரத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

