#BREAKING ரஜினி மகள் ரூ. 1 கோடி நிதியுதவி !!
#BREAKING ரஜினி மகள் ரூ. 1 கோடி நிதியுதவி !!

கொரொனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளார். ரஜினிகாந்த் சார்பாக அவருடைய மகள் சௌந்தர்யா நிதி வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி பொதுமக்கள், தொழிலதிபர்கள், சமூக அமைப்புகள் என பலர் கொரோனா நிவாரண பணிக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் குமார் ரூபாய் 25 லட்சம் அளித்துள்ளார். வங்கிப் பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்திற்கு நிதி அனுப்பியுள்ளார் நடிகர் அஜித்குமார். ஏற்கனவே நடிகர் சிவக்குமார் அவரது மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்தி ஆகியோர் நேரில் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நிவாரண தொகையாக ரூபாய் ஒரு கோடி அளித்தனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினி மகள் நிவாரண நிதி அளித்துள்ளார்.கொரொனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளார்.
newstm.in

