#BREAKING:- நடிகர் வடிவேலு ரூ.5 லட்சம் நிதியுதவி..!!
#BREAKING:- நடிகர் வடிவேலு ரூ.5 லட்சம் நிதியுதவி..!!

தமிழகத்தில் கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் தீவிர தடுப்புப்பணியில் களத்தில் வேலை செய்து வருகின்றனர். தற்போது 2 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு பதிவாகியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன. எனினும் மக்கள் முகக்கவசம் அணிவேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் வடிவேலு கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கினார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு, தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடைபெறுவதாக நடிகர் வடிவேலு பாராட்டு தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

