Theme Check

#BREAKING:- புதுச்சேரியில் ஏப். 30 நள்ளிரவு வரை அனைத்து மதுக்கடைகளும் மூடல் !!

#BREAKING:- புதுச்சேரியில் ஏப். 30 நள்ளிரவு வரை அனைத்து மதுக்கடைகளும் மூடல் !!

#BREAKING:- புதுச்சேரியில் ஏப். 30 நள்ளிரவு வரை அனைத்து மதுக்கடைகளும் மூடல் !!
X

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் சூழலில் அதனை தடுக்க தடுப்பூசி, முகக்கவசம் ஆகியவற்றை தாண்டி வேறு வழியின்றி பொதுமுடக்கத்தையும் மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளன.
அந்த வகையில் வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே வார இறுதி பொதுமுடக்கம், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன.

வடமாநிலங்களில் பரவல் கற்பனைக்கு எட்டாத வகையில் இருப்பதால் விதிகள் கடுமையாக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதே போல் புதுச்சேரி மாநிலத்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதியில் இரண்டு நாட்கள் பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.அதன்படி, மருந்தகம், பால், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மதுக்கடைகளை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூட அம்மாநில கலால்துறை துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.மதுக்கடைகள் மட்டுமில்லாமல் சாராயக் கடைகள், கள்ளுக்கடைகளும் மூட புதுச்சேரி மாநில கலால்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

விதிகளை மீறினால் கலால்துறை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it