#BREAKING : ஆன்லைனில் அரியர் தேர்வு! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
#BREAKING : ஆன்லைனில் அரியர் தேர்வு! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

உலகம் முழுவதுமே கடந்தாண்டு அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று தமிழகத்தையும் உருக்குலைத்துள்ளது. குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு, மாணவர்களை பெரும் சிரமத்துக்குள்ளாக்கப்பட்டனர். கற்றலின் தன்மையும் குறைந்து போய், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலைமையும் உருவானது.
மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது, தேர்ச்சி முறையை அறிவிப்பது என பல குளறுபடிகளும் நடைப்பெற்றன. 11ம் வகுப்பு வரையில் தேர்வு இல்லாமலேயே மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கு பணம் கட்டிய மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி என்கிற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடியை ஹீரோ போன்று உயர்த்தியது. வருடம் முழுவதும் படித்து தேர்வு எழுதிய மாணவர்கள் இதனால் விரக்தியடைந்த போக்கும் காணப்பட்டது.

அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாகவும், அரியர் தேர்வுகளை ரத்து செய்வதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்ததை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு, நீதிமன்றத்தில், அரியர் மாணவர்களுக்கு மே 17ந்தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ஆன்லைன் தேர்வை எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது. என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், தற்போது பரவி வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு அரியர் தேர்வுகள் அனைத்தையும் அடுத்த 8 வாரத்திற்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

