#BREAKING 'அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு': ரஜினியின் அண்ணாத்த முதல் பாடல் வெளியீடு !

#BREAKING 'அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு': ரஜினியின் அண்ணாத்த முதல் பாடல் வெளியீடு !

#BREAKING அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு: ரஜினியின் அண்ணாத்த முதல் பாடல் வெளியீடு !
X

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த’ திரைப்படத்தில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது.

விஸ்வாசம் படத்திற்கு பின் இயக்குநர் சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இப்படத்தை இயக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் ’அண்ணாத்த’ முதல் பார்வை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை அடைந்த நிலையில் இப்படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

aa

இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it