#BREAKING:- நாளை முதல் வங்கிகளின் நேரம் குறைப்பு !!
#BREAKING:- நாளை முதல் வங்கிகளின் நேரம் குறைப்பு !!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை நாளான இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை காலை 4 மணி முதல் நடைமுறைக்கு வரும்.
அதன்படி, அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ- பதிவு முறை தொடரும்.வீட்டை விட்டு வெளியே செல்வோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.
இந்நிலையில் நாளை முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அரை நாள் மட்டுமே இயங்கும் என்றும் வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை வங்கி சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது என மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.அதே நேரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நடைபெற்று வந்த ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

