#BREAKING: நாளை முதல் வங்கிகள் அரை நாள் மட்டுமே இயங்கும்!
#BREAKING: நாளை முதல் வங்கிகள் அரை நாள் மட்டுமே இயங்கும்!

தமிழகத்தில் 2021ம் ஆண்டில் முதல் லாக்-டவுன் இன்று விதிக்கப்பட்டிருந்தது. இன்று தமிழகம் முழுவதுமே சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகின்ற நிலையில், கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மத்திய அரசும், மாநில அரசும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெரிய பெரிய வணிக கட்டிடங்கள், மால்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களிலும் கொரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து நாளை முதல் தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா விதிமுறைகளின் விதிமுறைகளின் படி நாளை முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அரை நாள் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

