Theme Check

#BREAKING:- 2-வது முறையாக கேரள முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் பினராயி விஜயன் !!

#BREAKING:- 2-வது முறையாக கேரள முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் பினராயி விஜயன் !!

#BREAKING:- 2-வது முறையாக கேரள முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் பினராயி விஜயன் !!
X

கேரள சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி மீண்டும் அமோக வெற்றிபெற்றது. மொத்தம் உள்ள 140 கொகுதிகளில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி முன்னணி 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

பொதுவாக கேரளாவில் சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைப்பது வழக்கம். ஆனால் முதல் முறையாக தொடர்ந்து 2ஆவது முறையாக இடதுசாரி முன்னணி கேரளாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், கேரள மாநில முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக பினராயி விஜயன் பதவியேற்றுக் கொண்டார். திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் பினராயி விஜயன் தலைமையில் 21 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 அமைச்சர்களும், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 4 அமைச்சர்களும், ஜனதாதள எஸ், கேரள காங்கிரஸ் எம், என்.சி.பி ஆகிய கட்சிககுக்கு தலா ஒரு அமைச்சர் வீதமும் வழங்கப்படும். பாக்கி உள்ள இரண்டு மந்திரிகள் பதவியும் மீதமுள்ள நான்கு கட்சிகளுக்கு தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் வழங்கப்படும் என கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it