Theme Check

#BREAKING: மசூதியில் குண்டு வெடிப்பு.. 30 பேர் பலி: 50 பேர் படுகாயம்..!

#BREAKING: மசூதியில் குண்டு வெடிப்பு.. 30 பேர் பலி: 50 பேர் படுகாயம்..!

#BREAKING: மசூதியில் குண்டு வெடிப்பு.. 30 பேர் பலி: 50 பேர் படுகாயம்..!
X

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் மாகாணத்தில், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமையான இன்று வழக்கம்போல் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு திடீரென குண்டுவெடித்தது. இது குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Next Story
Share it