Theme Check

#BREAKING:- சென்னை வங்கியில் தீ விபத்து..!!

#BREAKING:- சென்னை வங்கியில் தீ விபத்து..!!

#BREAKING:- சென்னை வங்கியில் தீ விபத்து..!!
X

சென்னை அண்ணா நகர் 5-வது அவென்யூ சரவணபவன் ஓட்டல் அருகே உள்ள தனியார் வங்கி மற்றும் அலுவலகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.10 தீயணைப்பு வாகனங்களில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கீழ் தளத்தில் தனியார் வங்கி, மற்ற தளங்களில் பல ஐடி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

கீழ் தளத்தில் இருக்க கூடிய வங்கியில் இருந்துதான் தீ பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்ணிமைக்கும் கண நேரத்தில் வங்கி முழுவதும் புகை பரவியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் பதறிப் போயினர்.தொடர்ந்து அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக தீ பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

பல தனியார் நிறுவனங்கள் செயல்படும் 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it