#BREAKING:- சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 2 நீதிபதிகள் நியமனம்..!
#BREAKING:- சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 2 நீதிபதிகள் நியமனம்..!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஆறு பேரை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் பரிந்துரைத்த நிலையில், 2 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, வழக்கறிஞர்களாக பிராக்டீஸ் செய்து வந்த என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நியமனத்தால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது. நீதிபதிகள் காலியிடங்கள் 14 ஆக குறைந்துள்ளது. பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
Next Story

