#BREAKING:- நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார் !!

#BREAKING:- நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார் !!

#BREAKING:- நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார் !!
X

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல முக்கிய பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக சினிமா துறையில் பலர் கொரோனா காரணமாகவும், மாரடைப்பு காரணமாகவும் மரணித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இவர் காக்கிச்சட்டை, தில்லுக்குத்துட்டு, சதுரங்க வேட்டை, கருப்பன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காலமானார். ஆனால் தற்போது தான் செய்திகள் வெளியாகியுள்ளது.

அண்மையில் கொரோனாவிற்கு குணச்சித்திர நடிகர் பாண்டு,இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா,பிரபல இந்தி குணசித்திர நடிகை அபிலாஷா பட்டீல்,தெலுங்கு சினிமாவில் பிரபலமான பின்னணிப் பாடகர் ஜி. ஆனந்த்,தயாரிப்பாளர் அந்தோணி சேவியர்,நெல்லை சிவா,துணை நடிகர் மாறன்,ரஜினி முருகன் படத்தில் நடித்த பவுன்ராஜ் காலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it