Theme Check

#BREAKING : காங்கிரஸ் எம்.பி. திடீர் மரணம்! பதறிய ராகுல் காந்தி!

#BREAKING : காங்கிரஸ் எம்.பி. திடீர் மரணம்! பதறிய ராகுல் காந்தி!

#BREAKING : காங்கிரஸ் எம்.பி. திடீர் மரணம்! பதறிய ராகுல் காந்தி!
X

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சதவ் இன்று காலை காலமானார். அவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று காலை காலமானார்.



காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியுடன் மிகவும் நெருக்கமானவராக வலம் வந்தவர் திரு. ராஜீவ் சதவ். கடந்த மாதம் 22ம் தேதியன்று அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், புனேவில் உள்ள ஜஹாங்கிர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


பின்னர், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதால், வென்டிலேட்டர் ஆதரவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார்.

திரு.ராஜீவ் சதவ், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராகவும் இருந்து வந்தார். மகாராஷ்டிர மாநிலத்தில் அனைவரையும் அரவணைத்து செல்லக் கூடிய நேர்மையான காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். பொதுமக்களிடையே நெருக்கமானவராகவும் இருந்து வந்துள்ளார் ராஜீவ் சதவ். அவருடைய மறைவுக்கு அம்மாநிலத்தில் பொதுமக்கள் பலரும் அவருடைய புகைப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags:
Next Story
Share it