#BREAKING:- சர்ச்சை நடிகை மருத்துவமனையில் அனுமதி - கணவர் கைது..!!
#BREAKING:- சர்ச்சை நடிகை மருத்துவமனையில் அனுமதி - கணவர் கைது..!!

சர்ச்சை நாயகியாக திகழ்ந்து வருபவர் பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே.இவர் இயக்குநரும், தயாரிப்பாளருமான சாம் பாம்பே என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், நேற்று மாலை திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். சாம் தன் மனைவி பூனம் பாண்டேவை சரமாரியாகத் தாக்கியதால் பூனம் பாண்டே ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சாம் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்தார் பூனம். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சாம் பாம்பேவை நேற்று கைது செய்துள்ளனர்.

சாம் தாக்கியதில் பூனம் பாண்டேவுக்கு தலை, கண், முகத்தில் காயங்கள் அதிகமாக ஏற்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். தன்னை தாக்கியதாக பூனம் பாண்டே போலீசில் புகார் தெரிவித்திருப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக சாம் தன்னை தாக்கியதுடன், மிரட்டவும் செய்ததாக 2020ம் ஆண்டு புகார் அளித்தார் பூனம். இதையடுத்து சாம் பாம்பே கோவாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பூனம் பாண்டேவும் அப்போது ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ``என்னை அடித்தவருடன் சேர்ந்து வாழ முடியாது" என்று தெரிவித்திருந்தார். ஆனால், அடுத்த சில நாள்களில் மீண்டும் ஊடகங்களை அழைத்து, ``எங்களுக்குள் இருந்த அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிட்டது. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்புடன் இருக்கிறோம். திருமணம் என்றால் ஏற்ற தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். நான் இப்போது சாமை மிகவும் நேசிக்கிறேன்" என்று காதல் பொங்கத் தெரிவித்திருந்தார். ``

