#BREAKING:- கங்குலி குடும்பத்தினருக்கு கொரோனா..!!
#BREAKING:- கங்குலி குடும்பத்தினருக்கு கொரோனா..!!

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. மக்கள் இந்த வைரஸ் பாதிப்பு இருக்கும் நிலையிலும் இயல்பு வாழ்க்கையை தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால், லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.இந்நிலையில் கங்குலியின் மகள் உள்பட அவரது குடும்பத்தினர் நால்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு சமீபத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். கொரோனா தொற்றிலிருந்து மீண்ட கங்குலி கடந்த 31 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவரை மருத்துவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுத்தியிருந்தனர்.
இந்நிலையில், கங்குலியின் மகள் சனாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. மேலும், கங்குலியின் மாமா தெபாஷிஷ் கங்குலி, கிசின் ஷுவ்ரோதீப் கங்குலி, மனைவின் தங்கை ஜாஸ்மின் கங்குலி ஆகியோருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்ள் அனைவரும் தற்போது வீட்டு தனிமையில் இருக்கிறார்கள். கங்குலியும் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.

