BREAKING: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி !
BREAKING: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி !

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வகை தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை ஏற்பட்டுவிட்டது என்றே கூறலாம். இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,79,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் என பல்வேறு தரப்பினரும் பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 20,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் தொடங்கி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நீதிபதிகள் என அரசு அமைப்புகளை அச்சுறுத்தும் வகையில் பலருக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், லேசான அறிகுறிகளே உள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், சமீபத்தில் தன்னை சந்தித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் ராஜ்நாத் சிங் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
I have tested positive for Corona today with mild symptoms. I am under home quarantine. I request everyone who have recently come in my contact to isolate themselves and get tested.
— Rajnath Singh (@rajnathsingh) January 10, 2022
newstm.in

