Theme Check

#BREAKING : ஏப்ரல் 8 முதல் ஊரடங்கு?! பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

#BREAKING : ஏப்ரல் 8 முதல் ஊரடங்கு?! பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

#BREAKING : ஏப்ரல் 8 முதல் ஊரடங்கு?! பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
X

இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் திடீரென அதிகரிக்க துவங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் என பல மாவட்டங்களில் தினந்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிப்பது, தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கடந்த 48 மணிநேரத்தில் நாடு முழுவதும் 1.93 லட்சத்திற்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி 80 சதவீத பாதிப்பு மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்தது என்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருக்கிறது.

ஏப்ரல் 15ம் தேதிக்கு பின்னர் கொரோனா வைரஸின் 2வது அலை புதிய உச்சத்தை அடையும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை கொண்டு வருவதற்கும் வாய்ப்புள்ளது என்றும் தெரிகிறது. ஏப்ரல் 8ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து இந்த அவசர ஆலோசனையில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிகிறது. பொதுமக்கள் சரிவர சமுக விலகலை கடைப்பிடிக்காதது, மாஸ்க் அணியாதது குறித்தும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துவது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுற்றதும் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படும் என்கிற தகவலுக்கு தமிழக சுகாதார செயலாளர், அப்படி செய்வதற்கு வாய்ப்பில்லை என்று கூறியிருந்த நிலையில், மோடி தலைமையிலான ஆலோசனையில் ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் ஏப்ரல் 8 முதல் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:
Next Story
Share it