#BREAKING: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

#BREAKING: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

#BREAKING: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!
X

திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக 51வது தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.


டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்து இந்த விருதை அறிவித்தார். மேலும், தமிழக தேர்தலுக்கும், ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்ட்டதற்கும் தொடர்பு இல்லை என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருதாகும். ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் தாதா சாகேப் பால்கே விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த், ஏற்கனவே மத்திய அரசின் பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.



Tags:
Next Story
Share it