#BREAKING மத்திய தொழில்துறை செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு !!
#BREAKING மத்திய தொழில்துறை செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு !!

மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் குருபிரசாத் மொஹாபத்ரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலாளராக டாக்டர் குருபிரசாத் மொஹாபத்ரா பணிபுரிந்து வந்தார். இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில் இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி குருபிரசாத் உயிரிழந்தார். இதனால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டாக்டர் குருபிரசாத் மொஹாபத்ரா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய ரயில்வே மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
newstm.in

