#BREAKING: தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது! கருத்து கணிப்புக்கும் தடை!
#BREAKING: தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது! கருத்து கணிப்புக்கும் தடை!

தமிழகத்திலும், புதுவையிலும் நாளை மறுநாள் (ஏப்ரல்6) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
முன்னதாக இன்று மாலை 5 மணி வரை மட்டுமே தேர்தல் பரப்புரை செய்ய அனுமத்தி வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் கூடுதலாக 2 மணி நேரம் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இதனால், இன்று இரவு 7 மணியுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையை நிறுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது. தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் இன்று மாலையுடன் தங்களுக்கு சம்பந்தமில்லாத தொகுதியை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனி தேர்தல் வாக்கு பதிவு முடியும் வரையில் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் செய்ய தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது.

