Theme Check

#BREAKING: நெல்லை அருகே என்கவுன்டர்.. பிரபல ரவுடி ‘நீராவி முருகன்’ பலி..!

#BREAKING: நெல்லை அருகே என்கவுன்டர்.. பிரபல ரவுடி ‘நீராவி முருகன்’ பலி..!

#BREAKING: நெல்லை அருகே என்கவுன்டர்.. பிரபல ரவுடி ‘நீராவி முருகன்’ பலி..!
X

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவி மேடு பகுதியைச் சேர்ந்தவர் நீராவி முருகன் (48). பிரபல ரவுடியான இவர் மீது ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், போலீசார் அவரை பல மாதங்களாக தேடி வந்த நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ள பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதையடுத்து, அவரை கைது செய்ய திண்டுக்கல் தனிப்படை போலீசார் முயற்சித்தபோது காவலர்களை தாக்கிவிட்டு அவர் தப்பிச் செல்ல முயன்ற போது என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் உயரதிகாரிகள் நீராவி முருகன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்கவுன்டர் திட்டமிட்டு நடைபெறவில்லை. தற்காப்புக்காக நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it