Theme Check

BREAKING சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு !

BREAKING சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு !

BREAKING சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு !
X

திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார்.

சென்னை திருவொற்றியூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான நாம் தமிழர் கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்த சீமான், திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

seeman

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்துவதற்கு ரயில்வே துறையினர் அப்பகுதியில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக ஜேசிபி எந்திரங்களை கொண்டு வந்ததால் பொதுமக்கள் வீடுகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதி மக்களை சந்தித்து பேசி வந்தார். அப்போது அவர் மயங்கி கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

Next Story
Share it