#BREAKING: பரபரப்பு.. மேயர் கடத்தல்..!
#BREAKING: பரபரப்பு.. மேயர் கடத்தல்..!

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்-வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
அதேவேளை, தென் கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையே நடத்து வரும் போரில் இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் மெலிடோபோல் நகரத்தின் மேயர் இவான் பெட்ரோவ் ரஷ்யப் படைகளால் கடத்தப்பட்டதாக உக்ரைன் உள்விவகார அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அன்டன் ஜெராஷ்செங்கோ கூறுகையில், “உக்ரைனின் மெலிடோபோல் நகர மேயர் இவான் பெட்ரோவ், நகர நெருக்கடி மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார், அங்கிருந்து அவர் நகரின் வாழ்க்கை ஆதரவு பொறுப்பாளராக பணியாற்றினார்.

இந்நிலையில், மெலிடோபோல் நகரத்தை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய ராணுவத்துடன் நகர மேயர் இவான் பெட்ரோவ் ஒத்துழைக்க மறுத்ததால் அவர் கடத்தப்பட்டுள்ளார்” என்று கூறினார்.
ரஷ்ய ராணுவத்தினரால் மெலிடோபோல் நகர மேயர் இவான் பெட்ரோவ் கடத்தப்பட்ட சம்பவம் உக்ரைனில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

