#BREAKING:- பிரபல நடிகர் சத்யராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி..!!
#BREAKING:- பிரபல நடிகர் சத்யராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி..!!

1990 முதல், முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக அறியப்படுபவர், நடிகர் சத்யராஜ். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் வில்லனாக தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை தொடர்ந்தாலும், பின்னர் ஹீரோவாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்.தற்போது இளம் நடிகர்களுடன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, 'பாகுபலி' படத்தில், இவர் நடித்த கட்டப்பா வேடம் உலக அளவில் பிரபலமானது.
சினிமாவிற்கான ரெங்கராஜ் என்கிற தன்னுடைய பெயரை சத்யராஜ் என மாற்றி கொண்டவர்.நடிப்பை தாண்டி, 'வில்லாதி வில்லன்' என்கிற திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

