Theme Check

#BREAKING:- பிரபல கிரிக்கெட் வீரருக்கு திடீர் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி

#BREAKING:- பிரபல கிரிக்கெட் வீரருக்கு திடீர் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி

#BREAKING:- பிரபல கிரிக்கெட் வீரருக்கு திடீர் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி
X

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்சமாம் உல் ஹக்கிற்கு கடந்த மூன்று நாட்களாக நெஞ்சு வலி இருந்தது. லாகூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனையில் ஏதும் தெரியவில்லை. இன்று அதிகாலை லாகூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்த இன்சமாம்-க்கு, மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடைசி கட்டத்தில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் விரைவில் நலம்பெற கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

51 வயதான இன்சமாம் உல் ஹக் கேப்டனாக தான் ஆடிய 81 போட்டிகளில் 51 போட்டிகளை பாகிஸ்தானுக்காக வென்று கொடுத்துள்ளார். சுமார் 83 முறை அரைசதம் அடுத்துள்ள இன்சமாம், பாகிஸ்தான் அணிக்காக 20,000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர். இன்று வரை பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார். அது போக இன்சமாம் கோபக்காரரும் கூட. ஒரு முறை இந்திய ரசிகர் தன்னை இழிவாக பேசி விட்டார் என்று கேலரிக்குள் புகுந்து அவரை பேட்டால் அடிக்கப்போன சமாச்சாரம் எல்லாம் இன்சமாம் வாழ்வில் நடந்துள்ளது.

Tags:
Next Story
Share it