Theme Check

#BREAKING முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சந்தன் மித்ரா காலமானார் !

#BREAKING முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சந்தன் மித்ரா காலமானார் !

#BREAKING முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சந்தன் மித்ரா காலமானார் !
X

பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா டெல்லியில் நேற்று இரவு காலமானார். சந்தன் மித்ரா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது மகன் குஷன் மித்ரா டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து,அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாநிலங்களவை எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா ட்விட்டரில் தனது நெருங்கிய நண்பரை இழந்ததாக கூறினார். 1972 இல் பள்ளிப் பருவத்தின்போது எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்ட எம்பி தாஸ்குப்தா கூறியதாவது:



முன்னாள் எம்.பி.சந்தன் மித்ரா டெல்லியில் பயோனீர் செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.அவர் ஆகஸ்ட் 2003 முதல் ஆகஸ்ட் 2009 வரை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.இவர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து ஜூன் 2010 இல் மத்திய பிரதேசம் எம்.பி.யாக பதவி வகித்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன்,சந்தன் மித்ரா அவர்கள் நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it