#BREAKING:- முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் காலமானார் !!
#BREAKING:- முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் காலமானார் !!

முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் தலைவருமான அஜித் சிங் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 20 தேதி அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு நுரையிரல் பாதிப்பு ஏற்பட்டு உடல்நலம் மிகவும் மோசமடைந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். 7 தடவை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த அஜித் சிங்குக்கு வயது 82. முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகனான அஜித் சிங், மேற்கு உத்தரப்பிரதேசம் பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கி வந்தார். தந்தையின் மரணம் பற்றி மகன் முன்னாள் எம்.பி.ஜெயந்த் சிங் ட்விட்டரில், அஜித் சிங் கொரோனா தொற்று ஏற்பட்டு இறுதி வரையிலும் போராடி உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
அஜித் சிங் மறைவு மிகவும் இக்கட்டான இந்த நேரத்தில் நிகழ்ந்துள்ளது மிகவும் துயரமானதாகும் என்று ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள், விவசாயிகளுக்காகப் போராடியவர் அஜித் சிங் என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

