#BREAKING பெரும் அதிர்ச்சி.. ரோகித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றம் !!
#BREAKING பெரும் அதிர்ச்சி.. ரோகித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றம் !!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா- பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டியை பெரும் ஆவலுடன் எதிர்பாத்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மற்ற தொடர்களில் விளையாடாமல், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் மட்டும் மோதுகிறது.இதனால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இதில் டாஸ் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித், ராகுல், பந்த், ஹர்த்திக் பாண்டியா, புவனேஸ்வர்குமார், வருண் சக்ரவர்த்தி, ஷமி, பும்ரா ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.
இந்தியா பேட்டிங்கை தொடங்கிய நிலையில், ரோகித் சர்மா டக் அவுட்டாகி பெரும் அதிர்ச்சி அளித்துள்ளார் இந்திய ரசிகர்களுக்கு. போட்டியின் முதல் ஓவரின் 4ஆவது பந்தில் ரோகித் சர்மா LBW அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்தியா முதல் ஓவரில் 2 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
newstm.in

