Theme Check

#BREAKING பெரும் சோகம்.. கொரோனாவால் மாஸ்டர் சிவசங்கர் காலமானார்.. திரையுலகம் அதிர்ச்சி !!

#BREAKING பெரும் சோகம்.. கொரோனாவால் மாஸ்டர் சிவசங்கர் காலமானார்.. திரையுலகம் அதிர்ச்சி !!

#BREAKING பெரும் சோகம்.. கொரோனாவால் மாஸ்டர் சிவசங்கர் காலமானார்.. திரையுலகம் அதிர்ச்சி !!
X

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்.

கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு இன்று இரவு 8 மணியளவில் உயிர் பிரிந்ததாக அவரது மகன் தகவல் தெரிவித்துள்ளார்.

நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் இதுவரை தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்தவர். அஜித்தின் ‘வரலாறு’ படத்திற்கும் இவர்தான் நடனம் அமைத்தார். மேலும், தனுஷின் ‘திருடா திருடி’ படத்தில் இடம்பிடித்த ‘மன்மதராசா’ பாடலுக்கும் நடனம் அமைத்தவர் இவரே.

master shiva shankar

சூப்பர் ஹிட் அடித்த ராஜமெளலி - ராம் சரணின் ‘தீரா தீரா தீரா’ பாடலுக்கு நடனம் அமைத்து தேசிய விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாறு’, ‘பரதேசி’, ’அரண்மனை’, ’கஜினிகாந்த்’ உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்தவர் சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் மேலும் கவனம் ஈர்த்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it