#BREAKING :- 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் - ஒன்றிய அரசு..!!
#BREAKING :- 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் - ஒன்றிய அரசு..!!

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது எனவும் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி 2023 பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும், விபத்துகளை குறைக்கும் நோக்கில் வழிகாட்டு நெறிமுறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
MoRTH has made mandatory a safety harness and crash helmet for children below 4 years being carried on a two-wheeler with a restricted speed limit of 40 kmph.
— MORTHINDIA (@MORTHIndia) February 16, 2022
These rules will come into force from 15 February 2023. pic.twitter.com/Nwmjz1wpgA

