Theme Check

பிரதமர் மோடி தமிழில் ட்வீட் !

பிரதமர் மோடி தமிழில் ட்வீட் !

பிரதமர் மோடி தமிழில் ட்வீட் !
X

"நாளை நான் சென்னையில் இருப்பேன் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மோடி வரும் 14-ம் தேதி அதாவது நாளை காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரையில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். தளத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் போக்குவரத்து திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டியும், அவரது நிகழ்ச்சியையொட்டியும் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.


டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வரும் அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

இந்நிலையில், "பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது" பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

Tags:
Next Story
Share it