Theme Check

#BREAKING :- இந்தியா அபார வெற்றி !!

#BREAKING :- இந்தியா அபார வெற்றி !!

#BREAKING :- இந்தியா அபார வெற்றி !!
X

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இதன் மூலம் இந்திய அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியை வெளுத்து வாங்கியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 161 ரன்கள் எடுத்தார். ரஹானே அதிரடியாக 67 ரன்கள் எடுத்தார்.

10 விக்கெட்டுக்கு இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் பரிதாபமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனர். பின்னர் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்கிற கணக்கில் இந்தியா சமநிலை செய்துள்ளது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா அணியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Tags:
Next Story
Share it