Theme Check

#BREAKING: நாளை முதல் மாஸ்க் கட்டாயம்.. தமிழக அரசு திடீர் உத்தரவு !!

#BREAKING: நாளை முதல் மாஸ்க் கட்டாயம்.. தமிழக அரசு திடீர் உத்தரவு !!

#BREAKING: நாளை முதல் மாஸ்க் கட்டாயம்.. தமிழக அரசு திடீர் உத்தரவு !!
X

நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 771 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 34 லட்சத்து 63 ஆயிரத்து 068 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 38,026-ஆக உள்ளது. நேற்றைய நிலவரப்படி 4,678 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

dsf

தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட 771 பேரில், 345 கொரோனா வழக்குகள் சென்னையில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தலைமை செயலகத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற பொதுத்துறை துணை செயலாளர் எஸ்.அனு வலியுறுத்தியுள்ளார். மேலும் தலைமைசெயலக ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பணிக்கு வரவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

fg

இதேபோல் அனைத்து அலுவலகங்களிலும் அரசு ஊழியர்கள் முகக்கவசம் அணிந்துவர உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை முறையாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


newstm.in


Next Story
Share it