#BREAKING:- மினி வேன் கவிழ்ந்து விபத்து.. 3 சிறுமிகள் உட்பட 7 பேர் பலி..!
#BREAKING:- மினி வேன் கவிழ்ந்து விபத்து.. 3 சிறுமிகள் உட்பட 7 பேர் பலி..!

திருப்பத்தூர் அருகே, மலைப்பாதையில் சென்ற மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், 3 சிறுமிகள் உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையில் புங்கனுார் நாடு மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 30 பேர் கோவில் திருவிழாவிற்காக இன்று காலை 9.30 மணிக்கு அருகிலுள்ள நெல்லிவாசன் நாடு என்ற கிராமத்திற்கு மினி வேனில் சென்றனர். இந்த வேனை பரந்தாமன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

காலை 11.30 மணியளவில், புதூர் நாடு என்ற இடத்தில் மினி வேன் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் சுகந்தா, துர்கா, மங்கை, செல்வி மற்றும் 12 வயது சிறுமிகளான பவித்ரா, பரிமளா ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஜெயப்பிரியா என்ற 16 வயது சிறுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு திருப்பத்தூரில் இருந்து போலீசார், தீயணைக்கும் துறையினர் சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மலைப்பகுதி என்பதால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

