Theme Check

முக்கிய அறிவிப்பு..!! திட்டமிட்டபடி நாளை 10-ம் வகுப்பு ரிசல்ட்!!

முக்கிய அறிவிப்பு..!! திட்டமிட்டபடி நாளை 10-ம் வகுப்பு ரிசல்ட்!!

முக்கிய அறிவிப்பு..!! திட்டமிட்டபடி நாளை 10-ம் வகுப்பு ரிசல்ட்!!
X

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன்படி, கடந்த மாதம் 6-ம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது.

students

இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அதன்பின், கடந்த 1-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி, வரும் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

results

இதனைத் தொடர்ந்து ஜூன் 23-ம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதனிடையே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

தேர்வு எழுதாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it