Theme Check

முக்கிய அறிவிப்பு! மருத்துவப்படிப்பு பொதுப்பிரிவு கலந்தாய்வில் மாற்றம்!!

முக்கிய அறிவிப்பு! மருத்துவப்படிப்பு பொதுப்பிரிவு கலந்தாய்வில் மாற்றம்!!

முக்கிய அறிவிப்பு! மருத்துவப்படிப்பு பொதுப்பிரிவு கலந்தாய்வில் மாற்றம்!!
X

மருத்துவப்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு அட்டவணையில் தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குநரகம் சில மாற்றங்களை செய்துள்ளது.

புதிய அட்டவணைப்படி பிப்ரவரி ஒன்றாம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம். பிப்ரவரி 2ஆம் தேதி காலை 8 மணி முதல் 5ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.

ஏற்கெனவே வெளியிட்ட அட்டவணையில், 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கப்படும் என கூறப்பட்டது. தற்போது, பிப்ரவரி 7 முதல் 10ஆம் தேதி வரை சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

couns

இடங்கள் ஒதுக்கீடு தொடர்பான முடிவுகள் பிப்ரவரி 12ஆம் தேதிக்கு பதில் 15ஆம் தேதிக்கு வெளியிடப்படும். மருத்துவ இடம் ஒதுக்கீட்டிற்கான ஆணையை மாணவர்கள் 16ஆம் தேதி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

ஏற்கெனவே பிப்ரவரி 14 தேதி முதல் 17வரை அசல் சான்றிதழுடன் சென்று கல்லூரியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பிப்ரவரி 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு விவரங்கள் tnhealth.tn.gov.in/, tnmedicalselection.netஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

newstm.in

Next Story
Share it