Theme Check

#BREAKING தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு !

#BREAKING தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு !

#BREAKING தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு !
X

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் 653 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்திலும் ஏற்கெனவே ஒமைக்ரான் பரவியிருந்தது. அதாவது, தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், தற்போது மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

#BREAKING:

தொற்று உறுதியானவர்களில் 6 பேருக்கு சென்னை கிங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் தலா ஒருவர் திருவாரூர், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள்.

இதில் 4 பேர் ரிஸ்க் நாடுகளிலிருந்து வந்தவர்கள், 3 பேர் ரிஸ்க் குறைவாக உள்ள நாடுகளிலிருந்து வந்தவர்கள். மேலும் 4 பேர் கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. மேலும் ஒமைக்ரான் உறுதியான 11 பேரில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it