#BREAKING:- பிரபல சினிமா பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன் மனைவி காலமானார் !!
#BREAKING:- பிரபல சினிமா பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன் மனைவி காலமானார் !!

தமிழ் சினிமா உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட் பிலிம் நியூஸ் ஆனந்தன் மனைவியும், டைமண்ட் பாபு தாயாருமான சிவகாமி அவர்கள் சற்றுமுன் காலமானார்.அவருக்கு வயது 86
தமிழ் சினிமா உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். இவர் மனைவி சிவகாமி. இவருக்கு டைமண்ட் பாபு, ரவி, ஆகிய மகன்களும் கீதா, விஜயா என்ற மகள்களும் உள்ளனர். இவர்களில் டைமண்ட் பாபு முக்கிய நடிகர்களுக்கு செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். கலா பீடம், கலைச்செல்வம், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பிலிம் நியூஸ் ஆனந்தன் கடந்த 2016-ல் காலமானார்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக பிலிம் நியூஸ் ஆனந்தன் மனைவியும், டைமண்ட் பாபு தாயாருமான சிவகாமி அவர்கள் சற்றுமுன் காலமானார்.இவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் .

