Theme Check

#BREAKING: சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவியேற்பு..!

#BREAKING: சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவியேற்பு..!

#BREAKING: சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவியேற்பு..!
X

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது.

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் கவுன்சிலராக பதவியேற்றனர். இந்நிலையில், தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை திமுக மேயர் வேட்பாளராக ஆர்.பிரியா அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர் இன்று சென்னை மாநகர ஆணையர் ககன்தீப்சிங் பேடியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சென்னை மேயராக ஆர். பிரியா ஒருமனதாக தேர்வானார்.

இதையடுத்து அவருக்கு சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவி பிரமாணம் செய்துவைத்தார். இதையடுத்து, பிரியாவுக்கு ஆணையர் வாழ்த்துத் தெரிவித்து மேயருக்கான அங்கியையும் வழங்கினார்.

Next Story
Share it