#BREAKING:- வரும் 19ம் தேதி பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
#BREAKING:- வரும் 19ம் தேதி பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பிப்ரவரி 19 ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை தொடர்பான அறிவிக்கை தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (கடம்பூர் பேரூராட்சி நீங்கலாக) என மொத்தம் 648 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்படி சாதாரண தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு 19.02.2022 அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது.
Next Story

