Theme Check

#BREAKING:- புதுச்சேரி முதல்வராக 7-ம் தேதி பதவியேற்கிறார் ரங்கசாமி !!

#BREAKING:- புதுச்சேரி முதல்வராக 7-ம் தேதி பதவியேற்கிறார் ரங்கசாமி !!

#BREAKING:- புதுச்சேரி முதல்வராக 7-ம் தேதி பதவியேற்கிறார் ரங்கசாமி !!
X

புதுச்சேரியை பொறுத்தவரை ஆட்சி கலைக்கப்பட்டு அதன்பிறகு தேர்தல் நடைபெற்றது. கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில், அங்கு இறுதி கூட்டணி முடிவாகவே நாட்கள் ஆனது. அதனைத் தொடர்ந்து மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ்-16, பாஜக-9, அதிமுக-5 தொகுதிகளில் போட்டியிட்டன. எதிராக, காங்கிரஸ்-14, திமுக-13, மார்க்சிஸ்ட்-1, விசிக-1 தொகுதிகளிலும், ஏனாம் தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவு அளித்தும் போட்டியிட்டன. தேமுதிக-26, நாம் தமிழா் கட்சி-28, மநீம-22, அமமுக-20 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கின.

நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் என்.ஆர்.காங்கிரஸ் 10, பாஜக 6, திமுக 6, காங்கிரஸ் 2 , சுயேச்சை 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைய உள்ள நிலையில் முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.எதிர்பாராதவிதமாக ஏனாம் தொகுதியில் ரங்கசாமி வெற்றி வாய்ப்பை இழந்தார். அங்கு சுயேச்சை வேட்பாளர் கோலப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் வெற்றி பெற்றார். 648 வாக்குகள் வித்தியாசத்தில் ரங்கசாமி தோல்வியை சந்தித்துள்ளார். ஆனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமிக்கு அமோக வெற்றி கிடைத்தது.

இந்நிலையில், புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வராக ரங்கசாமி 7-ம் தேதி பதவியேற்கிறார்.

Tags:
Next Story
Share it